Yuva Shakthi

Youth Welfare Association, Chennai

Bharathiyar Birth Anniversary program at KCS Kasi Nadar College

Bharathi birthday pgm'13

பாரதியார் பிறந்த நாளையொட்டி, 12.12.2013 அன்று, கே.சி.எஸ். காசிநாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யுவசக்தியின் சார்பில் விழா நடத்தப்பட்டது.

நிகழ்வுகள்:
காலை முழுவதும் போட்டிகளும், உணவிற்கு பிறகு, பாரதியார் விளக்கக்காட்சியும், சிறப்பு விருந்தினர் உரையும் முடிவுசெய்யப்பட்டிருந்தது.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, பாரதியாரின் கொள்ளுப்பேரனான, திரு. நிரஞ்சன் பாரதி அவர்கள் வந்தார்.

விழாவில் காலை 10 மணி முதல் கவிதைப்போட்டியும், வினாடிவினா போட்டியும் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, குழுவிவாதம் ஒன்று, “பெண்கள் இன்று மதிக்கப்படுகின்றனரா இல்லையா?” என்கிற தலைப்பில் இரு அணிகளாக மாணவர்கள், யுவசக்தியின் தலைவர் மதுக்குமாரின் நடுவுநிலைமையில் விவாதித்தனர். எல்லா துறை மாணவர்களும் அனைத்து போட்டிகளிலும் மிகவும் ஆர்வமாக கலந்துகொள்ளவும் செய்தனர். காலையில் நிகழ்ந்த போட்டிகளில், மாணவர்களை பதிவதில் இருந்து, கலந்துகொள்ளச்செய்து, முடித்துசெல்லும்வரை, அந்த கல்லூரியின் தமிழ்துறையும் நாட்டு நலப்பணித்திட்டமும் இணைந்து எல்லா உதவிகளையும் செய்தது.

போட்டிகள் நிறைவடைந்து, மாணவர்கள் உணவு முடித்து வந்ததும், பாரதி யார்? என்ற தலைப்பில், யுவசக்தியின் உறுப்பினர் விஜயலக்ஷ்மி அவர்கள் விளக்கக்காட்சியின்மூலம் உரையாற்றினார். அரங்கத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.

நிறைவு விழா, சிறப்பு விருந்தினர் வந்தவுடன் தொடங்கியது. யுவசக்தியின் உறுப்பினர், கிரித்திகா தொகுத்துவழங்கினார். தலைமையுரையாற்றிய கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் திருமகன் அவர்கள், தமிழின் அவசியத்தையும், மாணவர்கள் என்றும் இந்த மொழியை காக்கவேண்டும் என்று வலியுறுத்தும்வகையில் பேசினார். அதற்கடுத்து, யுவசக்தியைப்பற்றியும் இவ்விழாவைப்பற்றியும் யுவசக்தியின் உறுப்பினர் தமிழ்மணி அறிமுகவுரையைத் தந்தார்.

அதைத்தொடர்ந்து, ‘தழல் வீரத்தில்’ என்ற தலைப்பில் பேசிய திரு. நிரஞ்சன் பாரதி அவர்கள் மாணவர்கள் தங்களுக்குள்ளிருக்கும், நெருப்பை உணர்ந்து அதை கையாளவேண்டும் என்று கூறினார். அவரது பேச்சு, அமைதியான முறையில் இருந்தாலும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் நிரம்பியிருந்தது.

சிறப்பு விருந்தினரின் பேச்சிற்கு பிறகு,காலையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்பின், தமிழ்துறையின் தலைவி, பேராசியை. மணிமேகலையின் நன்றியுரையுடன் விழா இனிதாக நடைபெற்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s